தமிழ்நாடு

tamil nadu

'மின்சார திருத்தம் விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை'- பூபேஷ் பாகல்

By

Published : Jun 8, 2020, 10:54 PM IST

ராய்ப்பூர்: 2020 மின்சார சட்டத் திருத்த மசோதா விவசாயிகள், ஏழைகள் நலனில் அக்கறை காட்டவில்லை என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

Bhupesh Beghel  Electricity Amendment Bill 2020  Poor  COVID 19  Lockdown  Farmers  Subsidised Electricity  Chhattisgarh  Agriculture  2020 மின்சார திருத்த மசோதா  சத்தீஸ்கர்  பூபேஷ் பாகல்  ஏழைகள், விவசாயிகள் பாதிப்பு
Bhupesh Beghel Electricity Amendment Bill 2020 Poor COVID 19 Lockdown Farmers Subsidised Electricity Chhattisgarh Agriculture 2020 மின்சார திருத்த மசோதா சத்தீஸ்கர் பூபேஷ் பாகல் ஏழைகள், விவசாயிகள் பாதிப்பு

2020 மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே. சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

2020 மின்சார சட்ட திருத்த மசோதா நாட்டின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில் இந்த திருத்த மசோதா விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்வில் அக்கறை காட்டவில்லை. விவசாயிகளுக்கு பாசனத்திற்காக வழங்கப்படும் மின்சாரத்திற்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படாவிட்டால் அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வார்கள்.

அது உணவு தானியங்களின் உற்பத்தியை பாதிக்கும். இந்த மசோதா குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருக்கும் உயர் வர்க்க மக்களுக்கும், ஆலோசகர்களுக்கும் வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் நிலத்தில் யதார்த்தத்தில் வாழ்பவர்களுக்கு இது பொருந்தாது.

விவசாயிகள், ஏழைகள், பொதுமக்கள் ஆகியோருக்கு தீங்கிழைவிக்கும் இந்த மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் அவர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். இதுமட்டுமின்றி இந்த மசோதா முதலாளித்துவத்தை ஊக்குவிக்கிறது. தனியார் நிறுவனங்கள் மின்சார வாரியத்தை கைப்பற்ற அனுமதிக்கிறது. மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது.

அந்த வகையில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வளங்கள் உள்ளது. ஆகவே இதனை முழு நாட்டுக்கும் செயல்படுத்துவது பொருந்தமானதாக இருக்காது. ஆகவே மத்திய அரசு இந்த மசோதாவை அமல்படுத்துவதற்கு முன்னர் மாநில அரசுகளுடன் முழுமையாக ஆலோசிக்க வேண்டும். விவசாயிகளின் மானியத்தில் கை வைப்பது நடைமுறைக்கு எதிரானது.

இவ்வாறு பூபேஷ் பாகல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மின்சார திருத்த மசோதாவுக்கு கே.சி.ஆர். எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details