தமிழ்நாடு

tamil nadu

ஏழு டிகிரியாக குறைந்த டெல்லி வெப்பநிலை

By

Published : Nov 29, 2020, 1:25 PM IST

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஏழு டிகிரியாக குறைந்தது மட்டுமல்லாமல், காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Delhi's air quality remains 'poor'
Delhi's air quality remains 'poor'

டெல்லி: இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி, டெல்லியில் இன்றும் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கும். குளிர் அதிகரிக்கும் என தெரிகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி, டெல்லியில் காற்றின் தர குறியீட்டு எண் 245ஆக உள்ளது என தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்றின் தர குறியீட்டு எண் சராசரியாக 231 என இருந்துள்ளது. நேற்று டெல்லியில் 15 கி.மீ வேகத்தில் குளிர் காற்று வீசியுள்ளது. இது இன்று சுமார் 8 முதல் 12 கி.மீ வரையில் காற்று வீசக்கூடும் என தெரிவித்தனர்.

டெல்லியில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வரையிலும், அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் வீசக்கூடும் என டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பான சாஃபர் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தப்பிக்குமா டெல்லி... மிக மோசமான நிலையில் காற்று மாசு!

ABOUT THE AUTHOR

...view details