தமிழ்நாடு

tamil nadu

' எங்க நாட்டுக்கும் வந்து சுத்திப் பாருங்க'- சுற்றுலா விசா வழங்க முடிவு செய்த சவூதி!

By

Published : Sep 27, 2019, 1:32 PM IST

ரியாத்: சுற்றுலாத்துறையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதன் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது.

saudi-arabia

கச்சா எண்ணெய் பொருளாதாரத்தில் பெயர் பெற்ற சவூதி அரேபியா தற்பொழுது சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, சவூதி அரேபியாவில் முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் வழங்க முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து சவூதி அரேபியாவின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி அரேபியாவில் விசா வழங்க முடிவு செய்துள்ளோம். இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடங்கள், கடல் உயிரினங்களைக் காண கடல்சார் பூங்காக்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி அரேபியாவில் விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு நீக்கப்படும்.

மேலும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர திட்டமிட்டுள்ளோம். இதனால் சுற்றுலாத்துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

சவுதி அரேபியாவில் மருத்துவர் வேலை; தமிழ்நாடு அரசு தகவல்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details