தமிழ்நாடு

tamil nadu

எல்லைப் பகுதிகளில் கூடாரங்களை அமைக்கும் சீனா - காங்கிரஸ்

By

Published : Jul 19, 2020, 11:50 PM IST

இந்திய ராணுவத்தின் ரோந்து பணியில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக எல்லைப் பகுதிகளில் சீனா கூடாரங்களை அமைத்துவருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு ராணுவம் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவத்தின் ரோந்து பணியில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக எல்லைப் பகுதிகளில் சீனா கூடாரங்களை அமைத்துவருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் அவர் கூறுகையில், "இந்திய பகுதிக்குள் சீன ஊடுருவல் மேற்கொள்வது தொடர் சவாலாக உள்ளது. டெப்சாங் சமவெளி, பாங்காங் சோ ஏரி பகுதிகளை ஆக்கிரமித்தது மட்டுமில்லாமல் கூடாரங்களை அமைத்து ராணுவத்தை குவித்துவருகிறது. எல்லை பகுதிகளில் முன்னிருந்த நிலையை மீட்டெடுக்காமல் ஊடுருவலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு ஊடகத்தை பயன்படுத்தி ஒரு மாயையை கட்டமைத்துவருகிறது. மோடி அரசின் இதுபோன்ற இடையூறுகள் சேவையை முன்னிறுத்துவதும் இல்லை, தேசியவாதத்தை முன்னிறுத்துவதும் இல்லை" என்றார்.

பிங்கர் 8 முதல் பிங்கர் 4 வரையிலான இந்திய எல்லைக்குட்பட்ட 8 கிமீ பகுதியை சீனா ஆக்கிரமித்து 3,000 ராணுவ வீரர்களை குவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தயார் நிலையில் உள்ளது - துணை குடியரசுத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details