தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் கோவளத்தில் சந்திப்பு

By

Published : Oct 12, 2019, 9:20 AM IST

ஹைதராபாத்: இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இரண்டாவது நாளாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு கோவளத்தில் நடக்கிறது.

Modi Xi summit


பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நேற்று மாலை நடந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்கின்றனர்.

இந்தச் சந்திப்பு சென்னை அருகேயுள்ள கோவளம் கடற்கரை விடுதியில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள விடுதியில் தங்கியிருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் தங்கியிருக்கிறார்.

இங்கிருந்து சீன அதிபர் சாலை மார்க்கமாக காரில் பயணித்து கோவளம் செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். சீன அதிபர், பிரதமர் சந்திப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க

மாமல்லபுரத்தை சீன அதிபருடன் சுற்றிப் பார்த்தது மகிழ்ச்சி - நரேந்திர மோடி ட்வீட்

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details