தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19 கால வங்கி கடனில் வட்டித் தொகை தளர்வு - மத்திய அரசு

By

Published : Oct 3, 2020, 12:25 PM IST

கோவிட்-19 காலகட்டத்தில் வங்கியில் 2 கோடிக்கும் குறைவாக கடன் வாங்கியவர்களின் வட்டித் தொகையில் தளர்வு அளிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

moratorium
moratorium

கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொதுமக்கள் சமாளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) மாத காலம் நீட்டித்து சலுகை வழங்கியது. அதேவேளை தவணைத் தொகை, அதன் வட்டியை பின்னர் செலுத்த வேண்டும், அதற்கு விலக்கு இல்லை எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆறு மாத தவணைக் காலத்தில் வட்டித்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வங்கியின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு நிபுணர் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அரசு நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டிருந்தது. ரிசர்வ் வங்கி, பொருளாதார நிபுணர் குழுவுடன் ஆலோசனை செய்த மத்திய அரசு தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

அதன்படி, மேற்கண்ட ஆறு மாத காலகட்டத்தில் கடன் தொகைக்கான காம்பவுண்ட் வட்டி எனப்படும் வட்டிக்கு வட்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான தனிநபர், சிறு குறு கடனாளிகளுக்கு இது பொருந்தும் என மத்திய அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சிறு குறு தொழில் நிறுவனம், கல்விக் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் கீழ் இரண்டு கோடிக்கு குறைவாக கடன் பெற்றோர் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'யாராலும் தடுக்க முடியாது' - சூளுரையுடன் மீண்டும் ஹத்ராஸ் செல்லும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details