தமிழ்நாடு

tamil nadu

மெஹபூபா முப்தி மீது தேசத்துரோக வழக்கு பதியக் கோரி மனு!

By

Published : Oct 29, 2020, 3:20 PM IST

ஸ்ரீநகர்: இந்தியத் தேசிய கொடி குறித்து அவதூறாக பேசியதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெஹபூபா முப்தி மீது தேசத்துரோக வழக்கு பதியக் கோரி மனு!
மெஹபூபா முப்தி மீது தேசத்துரோக வழக்கு பதியக் கோரி மனு!

2019ஆம் ஆண்டில் ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹபூபா முப்தி கடும் சட்டப்போராட்டத்திற்கு பின்னர் அக்.14ஆம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார்.

வீட்டுச்சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கடந்த 23ஆம் தேதி ஸ்ரீநகரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய முப்தி, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும்வரை, எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட எங்களின் ஜம்மு-காஷ்மீரின் கொடி எங்களிடம் மீண்டும் ஒப்படைக்கும்படும்வரை நாங்கள் அந்த மூவர்ணக் கொடியை ஏற்றமாட்டோம் என தெரிவித்திருந்தார்.

அவரது அந்த பேச்சானது, இந்தியாவின் தேசியக் கொடியை அவமரியாதை செய்வதாக அமைந்திருந்ததென குற்றஞ்சாட்டி, வழக்குறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா என்பவர் மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

மேலும், வழக்கறிஞர் உபேந்திர விக்ரம் சிங் மூலமாக ஜான்பூர் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், "2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்றது.

அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

இந்தியத் தேசத்தை போற்றும் குடிமக்கள் அனைவரும் அந்த நாளை உளமார கொண்டாடினர். அங்கு மூவர்ணக் கொடி பரப்பது உறுதி என அகம் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று ஊடகங்களிடையே ஜம்மு-காஷ்மீரின் பிடிபி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முப்தி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்களது உறவானது, எங்களது ஜம்மு - காஷ்மீர் கொடியைத் தவிர்த்துதான் தொடர வேண்டுமென்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் இன்றைய இந்தியாவுடன் நாங்கள் உறவைத் தொடர விரும்வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. சட்டத்தால் நிறுவப்பட்ட அரசின் மீது வெறுப்பைத் தூண்டி, நாட்டை பலவீனப்படுத்த முயல்கிறார்.

இந்த பேச்சு, நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும், பயபக்தியும் கொண்டவர்களின் மனதை புண்படுத்தி உள்ளது.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேண அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.

இந்த மனுவானது, வரும் நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details