தமிழ்நாடு

tamil nadu

பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தினமும் 8 விவசாயிகள் தற்கொலை - அதிர்ச்சி ரிப்போர்ட்

By

Published : Oct 17, 2019, 11:41 PM IST

மும்பை: கடந்த நான்டு ஆண்டுகளாக பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தினமும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Suicide

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு தகுதி நீக்கம், ஊழல், சாவர்க்கர்க்கு பாரத ரத்னா உள்ளிட்ட பல விவகாரங்கள் தேர்தல் பரப்புரையில் பேசப்பட்டுவருகிறது. ஆனால், விவசாயிகளின் நிலை குறித்த விவாதம் இன்று வரை தேர்தல் பரப்புரையில் எழுப்பபடாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தினமும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் முக்கியமாக 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் வரை 12, 021 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் 3, 263 விவசாயிகள், 2016ஆம் ஆண்டு 3, 080 விவசாயிகள், 2018ஆம் ஆண்டு 2, 917 விவசாயிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 396 விவசாயிகள் தற்கொலையால் இறந்துள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details