தமிழ்நாடு

tamil nadu

மக்கள் அச்சுறுத்தலால் பாதுகாப்புப் படையினரை நியமிக்கும் மருத்துவமனைகள்

By

Published : Oct 22, 2020, 5:37 PM IST

புதிதாக நோயாளிகளைச் சேர்க்க மறுக்கும் மருத்துவமனைகளில் மக்கள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் பல்வேறு மருத்துவமனைகள் மருத்துவமனையினையும், அதன் ஊழியர்களையும் பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினரை நியமித்துவருகின்றன.

Bengaluru hospitals appointing bouncers to deter miscreants
Bengaluru hospitals appointing bouncers to deter miscreants

பெங்களூரு: கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரிப்பதையடுத்து, மருத்துவமனையின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா மட்டுமின்றி, பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதங்கள் அதிகரித்துவருகின்றன. பலர் மருத்துவமனையின் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்.

அச்சமடைந்த பல்வேறு மருத்துவமனை நிர்வாகங்கள், தங்களது ஊழியர்களையும், சொத்துகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து காக்க பாதுகாப்புப் படையினரை நியமித்துவருகின்றன.

இது குறித்து பேசிய பெங்களூரு பிரக்கிரியா மருத்துவமனையின் செயல் தலைவர், "பாதுகாப்புப் படையினரை நியமிப்பது தவறான கண்ணோட்டத்தை மக்களுக்கு உண்டாக்கும் என்ற போதிலும், சிலரிடமிருந்து ஊழியர்களையும், மருத்துவமனையின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகுந்த அவசியமாக மாறுகிறது.

இந்த இக்கட்டான பேரிடர் காலகட்டத்தில் மருத்துவமனையைக் காப்பது அவசியமாகிறது. ஏனெனில் முன்னதாக, பல மருத்துவமனை ஊழியர்கள் மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிகிச்சைப் பெற்றுவரும் ஒரு நபர் இறப்பதால் மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிப்பதில் என்று பொருளல்ல, இதற்காக மருத்துவமனையை மக்கள் தாக்குவது முறையல்ல.

மக்களின் இந்தப் போக்கினாலேயே, சுழற்சி முறையில் மூன்று பணிக்காலத்திற்கு மூன்று லட்ச ரூபாய் செலவில் பாதுகாப்புப் படையினரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், அரசு ஒரு தனியார் மருத்துவமனைக்கு இரண்டு காவலர்கள் வீதம் காவல் பணிக்கு நியமித்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details