தமிழ்நாடு

tamil nadu

ராமர் கோயிலின் வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அனுமதி!

By

Published : Sep 2, 2020, 3:32 PM IST

லக்னோ: அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோயிலின் வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ( Ayodhya Development Authority) அனுமதி வழங்கியுள்ளது.

ayo
ayo

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிலையில், கட்டப்படும் ராமர் கோயிலின் வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2.47 லட்சம் சதுரமீட்டர் மொத்தப் பரப்பில் 12,879 சதுர மீட்டரில் ராமர்கோயில் கட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று வரைபடத்தை ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்தார். வரைபடத்தை ஆய்வு செய்ததில் ஏடிஏ அலுவலர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details