தமிழ்நாடு

tamil nadu

முதியவரின் வாழ்க்கையை வளமாக்கிய ஒற்றைப் புகைப்படம்!

By

Published : Oct 29, 2020, 11:07 AM IST

பெங்களூரு: சாலையோரம் மரக்கன்று விற்கும் முதியவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து விற்பனை இரட்டிப்பாகியுள்ளது.

ஒற்றைப் புகைப்படம் முதியவரின் வாழ்க்கையை வளமாக்கியது!
ஒற்றைப் புகைப்படம் முதியவரின் வாழ்க்கையை வளமாக்கியது!

கர்நாடகா தலைநகர் பெங்களூரு சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்பவர் 79 வயதான ரேவண்ணா சித்தப்பா. மருத்துவ குணம் நிறைந்த மரக்கன்றுகளை விற்பனை செய்யும் ரேவண்ணாவின் புகைப்படத்தை அப்பகுதிவாசி ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஒற்றை புகைப்படம் மூலம் தற்போது ரேவண்ணாவின் வாழ்க்கை வளமாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பெங்களூரு வாசிகள், ரேவண்ணாவிற்கு மேஜை, நாற்காலி, குடை கொடுத்துள்ளனர்.

இது குறித்து ரேவண்ணா சித்தப்பா கூறுகையில், “எனக்கு 78 வயது ஆகிறது. மூன்று வருடங்களாக கனக்புரா சாலையில்தான் மருத்துவ தாவரங்களை விற்பனை செய்துவருகிறேன். யாரோ ஒருவர் என்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் மக்களிடமிருந்து எல்லையின்றி அன்பு வந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது விற்பனையும் இரட்டிப்பாகியுள்ளது” என்றார்.

இதையும் படிங்க...சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்படுமா? - வெதர்மேன் பிரதீப்ஜான் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details