தமிழ்நாடு

tamil nadu

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் !

By

Published : Jul 17, 2020, 12:24 PM IST

Updated : Jul 17, 2020, 1:21 PM IST

earthquake jolts Andaman and Nicobar Islands
earthquake jolts Andaman and Nicobar Islands

12:04 July 17

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

கிழக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (ஜூலை 17) காலை 10 மணியளவில் 4.8 ரிக்டேர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.  

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் காத்ரா பகுதியில் 3.9 ரிக்டேர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில அதிர்வு காலை 4.50 மணியளவில் ஏற்பட்டதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்தது.

அஸ்ஸாம் மாநிலம் கரிம்கஞ் பகுதியில் 4.1 ரிக்டேர் அளவிலான நிலநடுக்கம் நேற்று (ஜூலை 16) ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் காலை 7.40 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் காந்திநகர், அஹமதாபாத், குச், மார்பி, ஜம்நகர், பதான், வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் சில வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்திலும் நேற்று காலை 4.47 மணியளவில் 2.3 ரிக்டேர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.  

இந்த நிலநடுக்கங்களில் எந்தவித பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மலையடிவாரங்களில் உள்ள மாநிலங்களில் தொடர்ந்து சில நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நிலநடுக்கவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jul 17, 2020, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details