தமிழ்நாடு

tamil nadu

சத்தீஸ்கர் சிறைகளிலிருந்த 3,418 கைதிகள் விடுதலை!

By

Published : May 17, 2020, 5:29 PM IST

ராய்பூர்: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சத்தீஸ்கர் மாநில சிறைகளில் இருந்த 3,418 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

Chhattisgarh
Chhattisgarh

கரோனா எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைகளில், ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

பரோல் அல்லது இடைக்கால பிணை வழங்கி கைதிகளை விடுவிக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, அனைத்து மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, சத்தீஸ்கர் மாநில சிறைகளிலிருந்து 3,418 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், ”மாநிலத்தில் உள்ள 33 சிறைகளிலிருந்து மே 15ஆம் தேதி வரை, நிபந்தனை பிணையில் ஆயிரத்து 269 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமான பிணையில் ஆயிரத்து 844 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 305 பேர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க:வெளிநாட்டுக் கைதிகள் புழல் சிறைக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details