தமிழ்நாடு

tamil nadu

கரோனா: ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் உயிரிழப்பு

By

Published : Jun 16, 2020, 8:56 PM IST

டெல்லி: மகாவீர் சக்ரா விருதுவென்ற ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார்.

1971-war-hero-mvc-awardee-lt-gen-vohra-dies-of-covid-19
1971-war-hero-mvc-awardee-lt-gen-vohra-dies-of-covid-19

மகாவீர் சக்ரா விருதுவென்ற ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் மோஹ்ரா (88) கரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி அவர் உயிரிழந்தார். 1932ஆம் ஆண்டு சிம்லாவில் பிறந்த இவர், வில்லிங்டன் உள்ள டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாஃப் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

இதையடுத்து இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், லெப்டினன் ஜெனரல் ஆக தனது பணியைத் தொடர்ந்தார். 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரின்போது இந்திய ராணுவத்தை வழி நடத்தியதில் இவருக்கு முக்கியப்பங்கு உள்ளது.

அப்போரில் இவரது சிறப்பான தலைமை நிர்வாகத்தையும், துணிவான செயல்களையும் கண்டு இவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. போர்க்களத்தில் எதிரிகளை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:2020ஆம் ஆண்டில் இதுவரை 94 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்

ABOUT THE AUTHOR

...view details