தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்

By

Published : Nov 27, 2021, 1:19 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைப் பணத்தில் பெண்களின் கல்விக்காக அவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் விடுதி ஒன்றை கட்டியுள்ளார். இதனால் பலரும் தங்கள் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

வரதட்சணை பணத்தில் விடுதி கட்டிய பெண்
வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காக செலவழித்த மணப்பெண்

பார்மர் என்னும் ஊரில் வசித்துவருபவர் அஞ்சலி. இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிரவீன் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவரது திருமணத்திற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் பெண்களின் கல்வியைக் கருத்தில்கொண்டு விடுதி ஒன்றை கட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக விடுதியை கட்ட ஒரு கோடி ரூபாயை தன் தந்தையிடமிருந்து பெற்று கட்டுமான பணியைத் தொடங்கினார் அஞ்சலி. ஆனால் விடுதியை முழுமையாகக் கட்டி முடிக்க மேலும் பணம் தேவைப்பட்டதால் மீண்டும் 75 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

இது குறித்து அஞ்சலி கூறுகையில், "நமது சமூகத்தில் பெண்கள் கல்வி பயில பல சிரமங்களுக்குள்ளாக வேண்டியுள்ளது. நான் கல்வி பயிலும்போது என்னுடைய குடும்பத்தார்கூட எனக்கு உறுதுணையாக இல்லை.

ஆனால் எனது தந்தை மட்டும் எனக்கு ஆதரவாக இருந்தார். ஆகையால் பெண்களின் கல்விக்காக இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன்" எனக் கூறினார்.

என் மகளின் ஆசை

இது பற்றி அஞ்சலியின் தந்தை கூறும்போது, "நான் ஏற்கனவே ஒரு கோடி ரூபாயை விடுதி கட்டுவதற்காக என் மகளிடம் கொடுத்தேன். பின்னர் விடுதியை கட்டி முடிக்க மேலும் பணம் தேவைப்பட்டதால் என் மகள் தனது திருமண வரதட்சணையாக நிரப்பப்படாத காசோலையை (blank cheque) கேட்டார். எனது மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதனைக் கொடுத்தேன்" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அஞ்சலியின் இந்த முயற்சிக்கு அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக நிற்போம்!

ABOUT THE AUTHOR

...view details