தமிழ்நாடு

tamil nadu

’தில் இருந்தா அரெஸ்ட் பண்ணுங்க’ - சவால் விடும் பாபா ராம்தேவ்!

By

Published : May 26, 2021, 9:22 PM IST

அரசுக்கு துணிவு இருந்தால் தன்னை கைது செய்யட்டும் என யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ், "ஆங்கில வழி மருத்துவம் (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல், அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்தார்கள்" எனப் பேசியது முன்னதாக சர்ச்சையைக் கிளப்பியது

இதையடுத்து ராம்தேவ்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (IMA-Indian Medical Association) சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் அவரைக் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் '#ArrestRamdev' என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது.

பாபா ராம்தேவ் பேசிய வைரல் வீடியோ

இதுதொடர்பாக ராம்தேவிடம் கேள்வி எழுப்பியபோது, அரசுக்கு துணிவிருந்தால் தன்னை கைது செய்யட்டும். சமூக வலைதளங்களில் மக்கள் இதுபோன்று செய்வதில் ஆச்சரியம் இல்லை என்று பேசிய காணொலி வைரலாகி வருகிறது. அதேவேளை இந்தக் காணொலியின் உண்மைத் தன்மையும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிங்க:மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் என்ற சவால் உருவாகியுள்ளது: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details