தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் வன்கொடுமை செய்ய முயன்ற சகோதரரை கொலை செய்த பெண்.. குஜராத்தில் நடந்தது என்ன?

By

Published : Jun 6, 2023, 3:03 PM IST

குஜராத் மாநிலம் நடியாட் அருகே குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சகோதரரை, கத்தியால் குத்திக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

நடியாட்:குஜராத் மாநிலம் நடியாட் அடுத்த மஞ்சிபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா கோஹில். இவர், தனது சகோதரரை கொலை செய்துவிட்டு, கீழே விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடினார். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதியானதால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மஞ்சிபுரா பகுதியை சேர்ந்தவர் சங்கீதா கோஹில். கணவர் இறந்துவிட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சங்கீதாவின் சகோதரர் சுனில் பர்மார். மஞ்சிபுரா கிராமத்தில் வசித்து வந்த இவர், அடிக்கடி சகோதரி வீட்டுக்கு செல்வது வழக்கம். சுனில் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சகோதரி சங்கீதாவின் வீட்டுக்கு சுனில் குடிபோதையில் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது சங்கீதா சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென சங்கீதாவின் கையை பிடித்து இழுத்த சுனில், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா, சுனிலை தள்ளிவிட்டுள்ளார். எனினும், போதையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் மீண்டும் சங்கீதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் சுனில்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா, அருகே இருந்த கத்தியால் சுனிலை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே சரிந்து விழுந்து மயங்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், சுனிலை மீட்டு கரம்சாத் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சங்கீதா கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று, சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் சுனிலுக்கு காயம் ஏற்பட்டதாக சங்கீதா நாடகமாடினார். பின்னர் சுனிலின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் போது சுனிலின் உடலில் காயங்கள் இருந்ததும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்ததும் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சங்கீதாவிடம் மீண்டும் விசாரித்த போது அவர் முன்னுக்கு முன் முரணாக பதில் அளித்தார். பின்னர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது, குடிபோதையில் வந்த தனது சகோததரர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதனால் அவரை கத்தியால் குத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சங்கீதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: Wrestlers protest: பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பம், உதவியாளர்களிடம் விசாரணை... தடயம் சிக்கியதா?

ABOUT THE AUTHOR

...view details