தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் கடும் குளிர் - இந்திய வானிலை ஆய்வு மையம்

By

Published : Dec 19, 2020, 2:18 PM IST

டெல்லியில் நடப்பு ஆண்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.9 டிகிரி செல்சியஸ் இன்று பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி வானிலை ஆய்வு மையம்
டெல்லி வானிலை ஆய்வு மையம்

டெல்லி:டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் இந்த ஆண்டு, குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.9 டிகிரி செல்சியஸ் இன்று (டிச. 19) பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வெளியிட்ட தகவலில், "நகரின் வெப்பநிலை 3.9 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அயன்நகர் லோதி சாலையில், வெப்பநிலை 3.3 முதல் 3.4 டிகிரியாக பதிவாகியுள்ளது. மேலும் நகரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசிவருகிறது.

ஜாஃபர்பூரில் நேற்றைய (டிச. 19) வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸை விட குறைவாகப் பதிவாகும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details