தமிழ்நாடு

tamil nadu

அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

By

Published : May 21, 2022, 9:27 PM IST

தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்து பிராந்திய மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Pradhan
Pradhan

மேகாலயா: மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்ட் ஹில் பல்கலைக்கழகத்தின் (NEHU) 27ஆவது பட்டமளிப்பு விழா இன்று (மே 21) நடைபெற்றது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர், "அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. நாட்டில் பயன்படுத்தப்படும் பிராந்திய மொழிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தை விட குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. தேசிய கல்விக் கொள்கையின்படி, அனைத்து உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள்தான். மேகாலயாவின் கரோ, காசி, ஜெயின்டியா ஆகியவையும் தேசிய மொழிகள்தான்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் நிபந்தனை!

ABOUT THE AUTHOR

...view details