தமிழ்நாடு

tamil nadu

'கிரண்பேடி செயலை வேறு வடிவத்தில் செய்ய தமிழிசையை அனுப்பி உள்ளார்கள்': கே.எஸ்.அழகிரி

By

Published : Feb 19, 2021, 8:49 AM IST

மத்திய அரசு ஆளுநர் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்தார்.

தற்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார். கிருஷ்ணரை கொல்ல பெண்களை பல்வேறு உருவங்களில் அனுப்பினார்கள். எல்லா முயற்சிகளிலும் கிருஷ்ணர் தப்பித்தார். ஆனால் அந்த பெண்கள்தான் தப்பிக்க முடியாமல் போனார்கள்.

நாராயணசாமியை அமைச்சரவையில் இருந்து அனுப்ப கிரண்பேடி முயற்சித்தார். ஆனால் அவரே வெளியே போய்விட்டார். தமிழிசைக்கு என்ன நிகழப்போகிறதோ தெரியவில்லை.

மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நான்கரை ஆண்டுகள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கிரண்பேடி செயல்பட்டதாக சொன்னபோது நடவடிக்கை எடுக்காமல், இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன; அதனை உள்துறை அமைச்சகம் சொல்ல வேண்டாமா. அன்றைக்கே கிரண்பேடியை வெளியே மோடி அனுப்பி இருந்தால் வரவேற்று இருக்கலாம். கிரண்பேடி செயலை வேறு வடிவத்தில் செய்ய தமிழிசையை அனுப்பி உள்ளார்கள்.

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தபோது ரூ.71க்கு விற்பனை செய்தோம். தற்போது கச்சா எண்ணெய் விலை 54 டாலருக்கு வீழ்ச்சி அடைந்தும் ரூ.92க்கு பாஜக அரசு விற்பனை செய்துவருகிறது.

மக்களுக்கு சிரமம் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மானியம் வழங்கப்பட்டது. மோடிக்கு பொருளாதாரம் தெரியாததால் தவறாக வரி விதிக்கிறார். மக்களுக்கு பொய்யான தகவலை தருகிறார். தோல்வியை மோடி அரசு ஒத்துக்கொள்ள வேண்டும்.

தேர்தல் அறிவித்ததும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு அதிக இடம் கேட்க இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது சந்தர்பவாதம்' - கே.எஸ் அழகிரி

ABOUT THE AUTHOR

...view details