தமிழ்நாடு

tamil nadu

அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை

By

Published : Jun 19, 2022, 11:24 AM IST

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை
அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை

டெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டம், நான்கு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழிகிறது.

இருப்பினும், அகனிபத் திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள் இறுதி ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நிர்ணயிக்கும் பரிசீலனைக்கு தகுதி பெற மாட்டார்கள். எனவே, அத்திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் நாட்டம் கொண்ட இளைஞர்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய விமானப்படை இந்த திட்டத்தின்கீழ் பணிக்கு சேர விரும்புவோருக்கான விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், வேலைக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, உடற்தகுதி மற்றும் மருத்துவம் தொடர்பான பரிசோதனை முடிவுகள் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இளைஞர்களை முப்படைகளுக்கு தகுதிப்படுத்துவதற்கான திட்டமாக அக்னிபத் முன்மொழியப்பட்டாலும், பாதுகாப்பு துறையில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் பிகார், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேரந்த இளைஞர்கள் கடும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு இடையிலும், இத்திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அக்னிபத் திட்டம்: இளைஞர்களை ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக மாற்ற வாய்ப்பு - சீமான்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details