தமிழ்நாடு

tamil nadu

நடுவானில் செல்போன் வெடித்ததால் பயணிகள் பீதி... ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

By

Published : Jul 17, 2023, 5:36 PM IST

டெல்லி நோக்கி சென்ற விமானத்தில் பயணியின் செல்போன் வெடித்த நிலையில் ஏர் இந்தியா விமானம் உடனடியாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தாபோக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Air India
Air India

உதய்பூர் : நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் செல்போன் பேட்டரி வெடித்ததாக கூறப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் Air India flight 470 என்ற விமானம் நண்பகல் 1 மணி அளவில் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த நிலையில், திடீரென பயணி ஒருவரின் செல்போன் பேட்டரி வெடித்ததாக கூறப்படுகிறது.

விமானத்தில் ஏறத்தாழ 140 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தாபோக் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகள் உடனடியாக கீழ் இறக்கப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர். பயணியின் செல்போன் பேட்டரி தான் வெடித்தது என பாதுகாப்பு படையினர் தெரிவித்த நிலையில், விமானம் மீண்டும் டெல்லி நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. என்ன காரணத்தினால் பயணியின் செல்போன் வெடித்தது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் நடுவானில் பயணியின் செல்போன் பேட்டரி வெடித்த சம்பவம் சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கத்திற்கு மாறாக பேட்டரி சூடாகி வெடித்ததா அல்லது வேறெதும் காரணமா என விமான நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இதேபோன்றதொரு சம்பவம் அசாம் மாநிலம் திப்ருகார்க்கில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்திலும் நடந்ததாக கூறப்பட்டு உள்ளது. நடுவானில் இண்டிகோ விமானம் பறந்து கொண்டு இருந்த நிலையில், செல்போன் தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேட்டரியில் உள்ள கோளாறு காரணமாக செல்போன் வழக்கத்திற்கும் மாறாக சூடானதால் தீப்பற்றியதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்து உள்ளது. துரிதமாக செயல்பட்ட விமான சிப்பந்திகள் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :பெயரை மாற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி.. புதிய பெயர் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details