தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகாவில் நில அதிர்வு

By

Published : Jul 9, 2022, 9:04 PM IST

கர்நாடகாவின் சில பகுதிகளில் இன்று காலை அதிக சத்தத்துடன் கூடிய நில அதிர்வு உணரப்பட்டது.

Earthquake again in Karnataka's Vijayapura  Bagalakote and some parts of Maharashtra  Earthquake  Earthquake in karnataka  karnataka earth quake  கர்நாடகாவில் நில அதிர்வு  நில நடுக்கம்  கர்நாடகா நில நடுக்கம்  கர்நாடகாவில் நில நடுகம்  கர்நாடகவில் தொடரும் நில அதிர்வு  நில அதிர்வு
நில அதிர்வு

கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் அதிக சத்தத்துடன் கூடிய நில அதிர்வு இன்று (ஜூலை 9) அதிகாலை உணரப்பட்டது. காலை 6.22 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு மூன்று, நான்கு வினாடிகளுக்கு நீடித்துள்ளது. முன்னதாக, காலை 5.40 மணியளவில் சிறிய நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகவில் தொடரும் நில அதிர்வு

ஏற்கெனவே, நேற்றிரவில் (ஜூலை 8) இருந்து அங்கு கனமழை பெய்து வந்த நிலையில், அதிகாலை நேரத்தில் நில அதிர்வும் ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில், இந்த பகுதிகளில் பலமுறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்று நிகழ்ந்தது போன்று பெரும் சத்தத்துடன் இதுவரை நிகழ்ந்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விஜயபுரா மட்டுமின்றி, பாகல்கோட், பெல்காவி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கர்நாடக பேரிடர் மேலாண்மை மையம், நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆகியவை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 3.0 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் மட்டுமின்றி மகாராஷ்டிராவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும், அவை 10-15 விநாடிகள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் நெருக்கடி: அதிபர் மாளிகை முற்றுகை... போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு...

ABOUT THE AUTHOR

...view details