தமிழ்நாடு

tamil nadu

Allu arjun latest news: புஷ்பாவுக்கு ஸ்வீட் ஊட்டும் மெகா ஸ்டார்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 6:39 AM IST

"புஷ்பா தி ரைஸ்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

allu arjun latest news
புஷ்பாவுக்கு ஸ்வீட் ஊட்டும் மெகா ஸ்டார்

ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 69வது தேசிய திரைப்பட விருதில் "புஷ்பா தி ரைஸ்" படத்தில் நடித்ததற்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெறுமையையும் அல்லு அர்ஜுன் பெற்று உள்ளார். இதனால், அல்லு அர்ஜுன் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்திலும் இதனை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 26, அல்லு அர்ஜுன் தனது தாய்வழி மாமாவும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியுடன் தேசிய விருது வென்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படங்களை, அல்லு அர்ஜுன் குடும்பத்தால் நடத்தப்படும் தயாரிப்பு பேனர்களான "கீதா ஆர்ட்ஸ்" மற்றும் "அல்லு என்டர்டெயின்மென்ட்" ஆகிய இரண்டு நிறுவனங்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து உள்ளன. பகிரப்பட்ட புகைப்படங்களில், அல்லு அர்ஜுன் சிரஞ்சீவியிடம் இருந்து பூங்கொத்தை பெறுவது போலவும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இனிப்புகளை ஊட்டுவதை போலவும் உள்ளது.

அல்லு அர்ஜுன் எப்போதுமே சிரஞ்சீவி தனக்கு உத்வேகம் அளிப்பவர் என்றும், எப்போதும் அவரையே பின்பற்றி வருகிறேன் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதனை வெளிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த "பேபி" என்ற தெலுங்கு படத்தின் சக்சஸ் மீட் ஒன்றில் அல்லு அர்ஜுன் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை சிரஞ்சீவியின் ரசிகனாக இருப்பேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அல்லு அர்ஜுன் "புஷ்பா தி ரூல்" படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார், இது 2021 பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான "புஷ்பா தி ரைஸின்" இரண்டாம் பாகம் ஆகும். அல்லு அர்ஜுனின் அடுத்து வரவிருக்கும் படங்களின் வரிசையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் பெயரிடப்படாத திரைப்படமும் அடங்கும், இது ஹான்ச்சோ பூஷன் குமாரால் தயாரிக்கப்பட்டுகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இதையும் படிங்க:“ரஜினிகாந்த் 170” படத்தின் பூஜை ஆரம்பம்...உற்சாக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details