தமிழ்நாடு

tamil nadu

Commercial LPG: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.. சென்னையில் கேஸ் விலை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 9:44 AM IST

Commercial LPG Prices Cut: வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது வணிக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை குறைப்பு
வணிக சிலிண்டர் விலை குறைப்பு

ஹைதராபாத்: வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.157.50 குறைக்கப்பட்டு ரூ1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

வணிக சிலிண்டர்களின் விலை: கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 1ம் தேதி 171 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2021.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 84.50 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், ஜூலை மாதத்தில் வணிக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது. அதன்பின்,ஆகஸ்ட் மாதத்தில் ரூ.99.75 குறைக்கப்பட்டு தற்போது 1,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில். செப்டம்பர் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.157 குறைந்து ரூ1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.

150 ரூபாய் வரை கேஸ் விலை குறைந்திருப்பதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அழகான கடிதம் எழுதுவது எப்படி? - உலக கடிதம் எழுதும் நாள் சிறப்பு தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details