தமிழ்நாடு

tamil nadu

திருமலை திருப்பதியில் குழந்தைகள், முதியோருக்கு அனுமதி!

By

Published : Dec 12, 2020, 6:38 PM IST

அமராவதி: திருப்பதி கோயில் வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tirumala Tirupati Temple
Tirumala Tirupati Temple

திருமலை திருப்பதி கோயில் வெங்கடேஸ்வர சுவாமி தரிசனம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் கோயிலுக்கு செல்ல அனுமதிப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்களின் உணர்வுகளையும் சடங்குகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுயக்கட்டுப்பாடுகளுடன் யார் வேண்டுமானாலும் கோயிலுக்குச் செல்லலாம் எனவும், முதியோர், குழந்தைகளுக்கு சிறப்பு வசதி ஏதும் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி கோயில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்

கரோனா தொற்று காரணமாக இதற்கு முன் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் விவரம் தெரியாமல் ஏமாறும் மக்கள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details