தமிழ்நாடு

tamil nadu

ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது

By

Published : Nov 28, 2022, 11:30 AM IST

ஷ்ரத்தா கொலை வழக்கில் தொடர்புடைய அஃதாபுக்கு போதைப்பொருள் வழங்கியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது
ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது

சூரத் (பஞ்சாப்): டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலரான அஃதாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் அஃதாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் உள்ளார்.

இந்த நிலையில் அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாக, பஞ்சாப் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைசல் மோமின் என்பவரை, சூரத் குற்றப்பிரிவினர் நான்கு நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்துள்ளனர். மேலும் பைசல் கைதாகும் போது ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வைத்திருந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பைசல் மோமின், சூரத்தின் லாஜ்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:என்னை துண்டு துண்டுடாக வெட்டப்போவதாக மிரட்டினார்... ஷ்ரத்தாவின் புகார் கடிதம்...

ABOUT THE AUTHOR

...view details