தமிழ்நாடு

tamil nadu

Aparna Balamurali: 'உலக மகா உருட்டுடா யப்பா...' அபர்ணாவிடம் சில்மிஷம் செய்த 2K kid

By

Published : Jan 20, 2023, 7:22 PM IST

Aparna Balamurali: கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் மாணவர் நடந்து கொண்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சட்டக் கல்லூரி மாணவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Abarna Balamurali
Abarna Balamurali

Aparna Balamurali: 'உலக மகா உருட்டுடா யப்பா...' அபர்ணாவிடம் சில்மிஷம் செய்த 2K kid

Aparna Balamurali: கேரளா:தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை அபர்ணா பாலமுரளி. தொடர்ந்து சர்வம் தாளமயம், தீதும் நன்றும் உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இணையாக, அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்திற்காக அபர்ணா முரளிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் அவர் நடித்து விரைவில் வெளி வர உள்ள படம் தங்கம். இந்த படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.

விழா மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர், அவருக்கு பூ கொடுத்து விட்டு சட்டென தோளை அணைத்து புகைப்படம் எடுக்க அழைத்தார். போட்டோ எடுக்க வந்த அபர்ணா பாலமுரளியின் தோள் மீது மாணவர் கையை போட முயன்ற நிலையில், அதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

இந்தச் சம்பவம் மேடையில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மீண்டும் மேடை ஏறிய மாணவர், தான் தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை என்றும்; உங்களின் ரசிகனாக உங்களுடன் போட்டோ எடுக்க தான் வந்தேன் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்ற நிலையில், அபர்ணா கைகொடுக்க மறுத்துவிட்டார்.

சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக்கேட்டது. தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரான விஷ்ணு தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்தார்.

இருப்பினும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சட்டக் கல்லூரி நிர்வாகம் மாணவர் விஷ்ணுவை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம்.. குடும்பத்துடன் நடனமாடிய அம்பானி..

ABOUT THE AUTHOR

...view details