தமிழ்நாடு

tamil nadu

இனி ஓட்டு போடுவது ஈஸி.. 9ஆம் வகுப்பு மாணவனின் புதிய கண்டுபிடிப்பு!

By

Published : Dec 13, 2022, 1:30 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பயோமெட்ரிக் முறையில் நாட்டில் அனைத்து பகுதியிலிருந்தும் வாக்களிக்கும் வசதியை கண்டுபிடித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ராஞ்சி:வாக்களிக்கும் முறையை, பயோமெட்ரிக் முறையுடன் இணைக்கும் முறையை (Student Prepared Online Voting System in Palamu) சுமார் 25 நாட்களில் தயாரித்து அசத்தியுள்ளார், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் உமா சங்கர் சிங். பாலமு மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் கண்டுபிடிப்பை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சிறுவயதிலேயே பெரிய சிந்தனையாளராக இருந்த பள்ளி மாணவர் உமாசங்கர் சிங், வாக்களிக்கும் முறை பற்றிய பல செய்திகளை தொலைக்காட்சி விவாதங்களிலும் செய்திகளிலும் பார்ப்பதை தனது வழக்கமாக கொண்டவர். அந்த வகையில், வாக்காளர்களின் வசதிக்காக தனது எழுந்த யோசனையின் படி இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

9ஆம் வகுப்பு மாணவரின் கண்டுபிடிப்பு:திட்டத்தை உருவாக்கிய பிறகு, உமாசங்கர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission of India) ஒரு அஞ்சல் மூலம் தனது திட்டம் பற்றிய தகவல் அளித்துள்ளார். அத்துடன், இந்த கண்டுபிடிப்பு குறித்த யோசனைக்கு அவர் காப்புரிமை பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த யோசனை தொடர்பாக நீதிமன்ற பத்திரமும் தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த பரிந்துரையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக்கில் வாக்களிப்பு!: அண்மையில் ராஞ்சியில் நடந்த மண்டல அறிவியல் கண்காட்சியில் உமாசங்கர் சிங் பங்கேற்று 'பயோமெட்ரிக் வாக்குப்பதிவு முறை' குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். உமா சங்கரின் இந்த திட்டமானது, நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இருந்தபடியே வாக்களிக்கும் வசதியைக் கொண்டது. அதே நேரத்தில் நாட்டின் முழு வாக்குப்பதிவும் இந்த பயோமெட்ரிக் முறையுடன் இணைக்கக் கூடியது இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக, இதற்கு ஆகும் கால நேரமோ இரண்டு நிமிடத்திற்கும் குறைவானதே.

நாட்டில் எங்கிருந்தும் சாத்தியம்: அவரது யோசனை எங்கே அங்கீகரிக்கப்பட்டது. உமாசங்கர் சிங் பயோமெட்ரிக்ஸ் வாக்களிப்பு ஒரு திட்டம் என்று விளக்குகிறார். இந்த முறையின் மூலம், முழு வாக்குப்பதிவும் பயோமெட்ரிக் முறையுடன் இணைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த நபரும் வாக்களிக்க முடியும். முழு செயல்முறையும் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக எடுக்கும்.

நாடு முழுவதும் நடக்கும் தேர்தல் பணிகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்திற்காகவே இதனை கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார், மாணவர் உமா சங்கர். இதற்கு பெரிதும் உதவியாக அமெரிக்க நிறுவனத்தில் பணி செய்துவரும் தனது லால் கமலேஷ் நாத் ஷாஹ்தேவ் உட்பட பலரும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் செயல்பாடு: இந்த பயோமெட்ரிக்ஸ் வாக்களிக்கும் முறைக்கு கைரேகை ஸ்கேனர், லேப்டாப் ஆன்லைன் வசதிகள் தேவைப்படும். முதலில் போர்ட்டல் திறக்கப்பட வேண்டும். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட பகுதியின் வாக்குப்பதிவு குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். வாக்காளரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்.

இந்த செயல்முறைக்கு பிறகு கைரேகை அமைப்பு வேலை செய்யும். கைரேகை செயல்முறைக்குப் பிறகு, வாக்குச் சாவடி அதிகாரிகள் அதைச் சரிபார்த்து, அதன் பிறகு வாக்குப்பதிவு செய்யலாம். திட்டத்தின் மூலம் ஆன்லைனில் வாக்களிக்க, தொடர்புடைய இணையதள பக்கத்தைத் திறந்து கைரேகை ஸ்கேனரை நிறுவ வேண்டும். கைரேகை போட்ட பிறகு தகுந்த விவரங்கள் தானாக வந்தப் பின் இந்த திட்டத்தில் வாக்களிப்பது சாத்தியமாகும். இந்த செயல்முறைக்குப் பிறகு, வாக்களிக்கக்கூடிய இடத்திலிருந்து பார்வை கருத்துக் கணிப்பு என்ற விருப்பமும் வரும்.

விவசாயியின் மகனுக்கு பாராட்டுகள்:பாலமு பகுதியில் நக்சல்களின் தீவிரமான தாக்குதலுக்குள்ளான பிதோரியா பகுதியில் இந்த மாணவன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜானக்புரி, மேதினி நகரிலுள்ள தனது மாமா வீட்டிலிருந்து படித்து வருகிறார். இவரின் தந்தையான அஜித் சிங் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். பிதோரியா ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ளது. பாலமு பிரதேசத் தலைமையகமான மேதினி நகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது.

மாணவனின் இந்த கண்டுபிடிப்பை அனைவரும் வெகுவாக பாரட்டி வருவதோடு, இதனை இந்திய தேர்தல் ஆணையம் ஆராய்ந்து ஏற்க பரிசீலனை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!

ABOUT THE AUTHOR

...view details