தமிழ்நாடு

tamil nadu

நர்சிங் கல்லூரியில் 93 மாணவர்களுக்கு கரோனா: கட்டுப்பாடு வட்டத்திற்குள் விடுதி!

By

Published : Apr 25, 2021, 7:48 AM IST

டோராடூன்: உத்ரகாண்ட் அரசு நர்சிங் கல்லூரியில், 93 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Uttarakhand
உத்தரகண்ட்

உத்ரகாண்ட்டில் சுர்சிங் தாரில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 93 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரி விடுதியைக் கட்டுப்பாடு பகுதியாக மாநிலச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மேலும், 200 மாணவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவிட் பரிசோதனையில் கரோனா இல்லை அறிக்கை வந்த 65 மாணவர்கள், வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அலுவலகங்களில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 28 வரை மூடப்படும் என உத்ரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஆட்டம் கண்ட டெல்லி எய்ம்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details