தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 6:02 PM IST

Kerala child rape case: கேரளாவில் புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

கேரளா:எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா என்னும் பகுதியில் உள்ள நெற்பயிருக்குள் படுகாயமடைந்த நிலையில் 8 வயது பெண் குழந்தை இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக, புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

அதிகாலை 2 மணியளவில் தனது பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் மேல் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்த தடையங்களை சேகரித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதே ஆலுவாவில், ஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர். அதே பாணியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் மீண்டும் நடைபெற்றிருப்பதால் காவல் துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. 6 பேரை அதிரடியாக கைது செய்த சென்னை போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details