தமிழ்நாடு

tamil nadu

கரோனா 2ஆம் அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழப்பு

By

Published : Jun 16, 2021, 10:37 PM IST

கரோனா இரண்டாம் அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில் 115 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

730 doctors died in COVID-19 second wave, Bihar reported maximum fatalities: IMA
கரோனா 2ஆம் அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழப்பு

கரோனா இரண்டாம் அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில வாரியாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையையும் வெளியாகியுள்ளன.

மாநிலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை
டெல்லி 109 மருத்துவர்கள்
உத்தரப் பிரதேசம் 79 மருத்துவர்கள்
ஆந்திரப்பிரதேசம் 38 மருத்துவர்கள்
தெலங்கானா 37 மருத்துவர்கள்
கர்நாடகா 9 மருத்துவர்கள்
கேரளா 24 மருத்துவர்கள்
ஒடிசா 31 மருத்துவர்கள்
மகாராஷ்டிரா 23 மருத்துவர்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், புதிதாக மேலும் 62,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தொற்று பாதிப்பு 5 விழுக்காட்டுக்கும் கீழாக உள்ளது.

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர்களின் விகிதம் 95.80 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,542 பேர் கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா 3ஆவது அலைக்குத் தயாராக இருக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details