தமிழ்நாடு

tamil nadu

Chemistry Nobel Prize 2023: வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 9:17 PM IST

மவுங்கி ஜி. பவேண்டி (Moungi G. Bawendi), லூயிஸ் ஈ. புரூஸ் (Louis E. Brus) மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய மூன்று விஞ்ஞானிகளும் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுயை பெற உள்ளனர். குவாண்டம் புள்ளிகள் மற்றும் நானோ துகள்களின் பண்புகளை நிர்ணயிக்கும் அளவு குறித்த ஆராய்ச்சி செய்ததற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel-prize-in-chemistry awarded to Moungi G Bawendi Louis E Brus Alexei I Ekimov
2023 வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்:குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு 2023 வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவித்துள்ளனர். மவுங்கி ஜி. பவேண்டி (Moungi G. Bawendi), லூயிஸ் ஈ. புரூஸ் (Louis E. Brus) மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய மூன்று விஞ்ஞானிகளும் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுயை பெற உள்ளனர்.

2023ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று (அக்.4) அறிவித்தது. குவாண்டம் புள்ளிகள் மற்றும் நானோ துகள்களின் பண்புகளை நிர்ணயிக்கும் அளவு குறித்த ஆராய்ச்சி செய்ததற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என மொத்தமாக ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

நோபல் பரிசு பெற்ற மூன்று வேதியியல் விஞ்ஞானிகளுக்கும் பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்குத் தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் இந்திய ரூபாயில் 7.33 கோடி ரொக்கம் (மூன்று விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து) ஆகியவை வழங்கப்படுகின்றது.

லூயிஸ் ஈ. புரூஸ் (Louis E. Brus) மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய விஞ்ஞானிகள் 1980களில் குவாண்டம் புள்ளிகளைக் உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளனர். குவாண்டம் புள்ளிகள் என்பது குவாண்டம் விளைவுகள் பண்புகளைத் தீர்மானிக்கும் நானோ துகள்கள் குறிக்கிறது. 1993ஆம் ஆண்டில் மவுங்கி ஜி. பவேண்டி (Moungi G. Bawendi) குவாண்டம் புள்ளிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்து ஆய்வில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். இவரின் நானோ தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மவுங்கி ஜி. பவேண்டி (Moungi G. Bawendi), 1961ஆம் ஆண்டு பிரான்ஸ் பாரிஸ் பிறந்தவர். பிஎச்டி 1988 சிகாகோ பல்கலைக்கழகத்தில் முடித்தார். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) பேராசிரியர் ஆவார்.

லூயிஸ் ஈ. புரூஸ் (Louis E. Brus), 1943 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹெச், கிளீவ்லேண்டில் பிறந்தார். பிஎச்டி 1969 கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆவார்.

அலெக்ஸி ஐ. எகிமோவ் (Alexei I. Ekimov), முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் 1945ல் பிறந்தவர். பிஎச்டி 1974ல் ரஷ்யாவில் உள்ள லோபி (loffe) பிஸிக்கல்-டெச்ணிகள் இன்ஸ்டிடியூட் முடித்தார். நியூயார்க் நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜியின் முன்னாள் தலைமை விஞ்ஞானி ஆவார்.

இதையும் படிங்க:2023 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details