தமிழ்நாடு

tamil nadu

Parliament winter session: 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

By

Published : Nov 29, 2021, 4:58 PM IST

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Rajya Sabha MPs suspended
Rajya Sabha MPs suspended

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இதன் காரணமாக அவை நடவடிக்கை கடும் பாதிப்புக்குள்ளானது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காங்கிரசை சேர்ந்த பூலோ தேவி நேதாம், சய்யா வர்மா, ரிபுன் போரா, ராஜாமணி படேல், சயீத் உசேன், அகிலேஷ் சிங் ஆகிய ஆறு உறுப்பினர்களும், சிவசேனாவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்ப்பட்டுள்ளனர்.

அதேபோல், திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த டோலா சென், சாந்த சேத்ரி ஆகிய இருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த எலமாரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பினோய் விஸ்வாம் என மொத்தம் 12 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆதரவு திரட்டுகிறாரா கேப்டன் அமரீந்தர் சிங்? ஹரியானா முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details