தமிழ்நாடு

tamil nadu

பிகாரில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு.. 3 சிறுவர்கள் கைது..

By

Published : Feb 25, 2023, 8:21 PM IST

பிகாரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு

பிகார் மாநிலம் போத்கயாவில் 3 சிறுவர்கள் 10 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், பிப். 24ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே சிறுமி சென்று கொண்டிருந்தபோது சிறுவர்கள் மூன்று பேர் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனடிப்படையில் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம். சிறுமியையும், சிறுவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details