தமிழ்நாடு

tamil nadu

மான் அமைச்சரவையில் 10 'சிங்'கங்கள்.. கவர்னர் மாளிகையில் இன்று பதவியேற்பு!

By

Published : Mar 19, 2022, 2:56 PM IST

Updated : Mar 19, 2022, 3:22 PM IST

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் (Bhagwant Mann) அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் இன்று இணைந்தனர். முன்னதாக, 10 புதிய அமைச்சர்களின் பதவியேற்பு சனிக்கிழமை (மார்ச் 19) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Bhagwant Mann
Bhagwant Mann

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களான ஹர்பால் சிங் சீமா (Harpal Singh Cheema) மற்றும் குல்தீப் சிங் தலிவால் (Kuldeep Singh Dhaliwal) ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இணைகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய 10 அமைச்சர்கள் குறித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 18) ட்விட்டரில் முதலமைச்சர் பகவந்த் மான், “பஞ்சாப் புதிய அமைச்சரவை நாளை (அதாவது இன்று) பதவியேற்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்கள் நமக்கு பொறுப்பை வழங்கியுள்ளார்கள். நாம் மக்களுக்காக இரவு-பகல் பாராது கடுமையாக உழைத்து ஒரு நேர்மையான அரசாங்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

பஞ்சாப் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள்..

  1. ஹர்பால் சிங் சீமா
  2. பல்ஜித் கவுர்
  3. ஹர்பஜன் சிங் ETO
  4. விஜய் சிங்லா
  5. லால் சந்த் கட்டருசக்
  6. குர்மீத் சிங் மீட் ஹேயர்
  7. குல்தீப் சிங் தலிவால்
  8. லால்ஜித் சிங் புல்லர்
  9. பிராம் ஷங்கர்
  10. ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் ஆகியோர் ஆவார்கள்.

இந்த 10 பேருக்கும் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக மாநிலத்தின் முதல்- அமைச்சராக பகவந்த் மான் சிங் மார்ச் 17ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். சபாநாயகராக டாக்டர். இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் (Dr Inderbir Singh Nijjar) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : முதல் பந்திலே சிக்ஸர்.. பஞ்சாப் முதல்வர் நடவடிக்கையால் ஆடிப்போன அதிகாரிகள்!

Last Updated : Mar 19, 2022, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details