தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தமிழ்நாடு சட்டப்பேரவை: காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகள் மீதான விவாதம்

🎬 Watch Now: Feature Video

சட்டப்பேரவை கூட்டத்தொடர் (Tamilnadu Assembly YT)

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 3, 2026 at 9:32 AM IST

Updated : September 3, 2026 at 7:11 PM IST

சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் வினாக்கள் - விடைகள் நேரம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (திருத்த) சட்ட முன்வடிவை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின், முதன்மை நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என அவர் தனி தீர்மானம் கொண்டு வருகிறார். தொடர்ந்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றன.  

ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8ஆம் தேதிவரை நடைபெறுகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெற்றன.

இதனிடையே, முக்கிய பிரச்சினைகள் குறித்த தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் கவன ஈர்ப்பு தீர்மானங்களும் அவையில் இடம்பெற்று வருகின்றன. 13வது நாளான இன்றும் விவாதம் தொடர்கிறது.

Last Updated : September 3, 2026 at 7:11 PM IST