தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தமிழ்நாடு சட்டப்பேரவை: பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள்

🎬 Watch Now: Feature Video

சட்டப்பேரவை கூட்டத்தொடர் (சட்டப்பேரவை கூட்டத்தொடர்)

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 9:38 AM IST

Updated : September 2, 2026 at 7:00 PM IST

சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. நேற்றைய தினத்தை போலவே இன்றும் வினாக்கள் - விடைகள் நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.  

அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அடுத்து, 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மதிப்பீட்டுக் குழுவிற்கு 16 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், பொதுக் கணக்கு குழுவிற்கு 16 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், பொது நிறுவனங்கள் குழுவிற்கு 16 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், அவை உரிமைக் குழுவிற்கு 14 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல் ஆகிய அரசினர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

அடுத்ததாக, 2026-27ஆம் ஆண்டுக்கான 12ஆம் நாள் மானியக் கோரிக்கைகள் நடைபெறுகிறது. இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.  

ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8ஆம் தேதிவரை நடைபெறுகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெற்றன.

இதனிடையே, முக்கிய பிரச்சினைகள் குறித்த தனித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் கவன ஈர்ப்பு தீர்மானங்களும் அவையில் இடம்பெற்று வருகின்றன. 12வது நாளான இன்றும் விவாதம் தொடர்கிறது.

Last Updated : September 2, 2026 at 7:00 PM IST