தமிழ்நாடு

tamil nadu

அக்கொண்டப்பள்ளி எருதுவிடும் விழா; 20க்கும் மேற்பட்டோர் காயம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 7:40 PM IST

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே இன்று (பிப்.08) நடைபெற்ற எருதுவிடும் விழாவில் கலந்து கொண்ட இளைஞர்களில், 20க்கும் மேற்பட்டோர் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. ஒசூர், பாகலூர், சூளகிரி, இராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட காளைகள் இந்த விழாவில் பங்கேற்றன. 

இந்த எருதுவிடும் விழாவினைக் காண கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, கர்நாடக மாநிலப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் சூழ்ந்திருந்தனர். காளைகளை அடக்க குவிந்திருந்த கட்டுக்கடாங்காத காளையர்கள் மத்தியில், கொம்புகளில் தடுக்கைகளை கட்டிக்கொண்டு காளைகள் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தன. 

மாடுகளுக்கு போட்டியாக இளைஞர்களும் நேருக்கு நேர் மோதி மாடுகளை அடக்கினர். இதில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் கை, கால் முறிந்த நிலையில், காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details