தமிழ்நாடு

tamil nadu

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா விருந்தகம்... 900 நாட்களை கடந்து உணவு விநியோகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 2:02 PM IST

Updated : Feb 15, 2024, 7:04 AM IST

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் 'விலையில்லா விருந்தகம்' என ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நடிகர் விஜயின் ரசிகர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், கொசப்பேட்டை பகுதியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விலையில்லா விருந்தகமாக கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இங்கு நாள்தோறும் காலை உணவாக ஏழை எளிய மக்களுக்கு இட்லி, பொங்கல், வடை என தொடர்ச்சியாக இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து இன்று (பிப்.14) 900வது நாளாக சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது, நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றி கழகமாக (Tamilaga vetri kalagam) அறிவிக்கப்பட்ட நிலையில் விலையில்லா விருந்தகம் மேலும் 5 இடங்களில் விரைவில் துவங்கப்பட உள்ளது என வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். 

Last Updated : Feb 15, 2024, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details