தமிழ்நாடு

tamil nadu

திருக்கல்யாண மாதா திருத்தல 111வது ஆண்டு தேரோட்டத் திருவிழா கோலாகலம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 10:14 AM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவிலேயே 2 இடங்களில் இத்திருக்கல்யாண மாதா காட்சியளிக்கிறார். ஒன்று பாண்டிச்சேரி, மற்றொன்று சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை திருக்கல்யாணமாதா திருத்தலமாகும். 

இந்த திருத்ததலத் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 111-வது ஆண்டு தேரோட்டத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், தினமும் காலையில் 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீயும் நடைபெற்றது. 

ஒன்பதாம் திருவிழாவான நேற்று இரவு 6 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதற்கு முன்னர், மாலை ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. 

தற்போது 10ஆம் நாள் திருவிழாவான இன்று காலை முன்னாள் ஆயர் இவோன் தலைமையில், பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ABOUT THE AUTHOR

...view details