தமிழ்நாடு

tamil nadu

LIVE: முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்..தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 9:32 AM IST

Updated : Mar 1, 2024, 9:44 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.1) 71வது பிறந்தநாள் காணுகின்றார். இதனையொட்டி, தலைவர்கள் நினைவிடங்களில் சென்று அவர் மரியாதை செலுத்த உள்ளார். அதை நேரலையில் காணலாம்..அதன்படி, இன்று காலை 8 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் தமிழக முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.அதனைத்தொடர்ந்து, காலை 8.30 மணி அளவில் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார்.முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Last Updated :Mar 1, 2024, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details