தமிழ்நாடு

tamil nadu

Live: கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 6:10 PM IST

Updated : Mar 18, 2024, 7:45 PM IST

கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா கோயில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையில் நரேந்திர மோடியின் வாகன பேரணி நிகழ்ச்சி (Prime Minister Modi Road Show) தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான நேரலை காட்சிகளை இங்கு காணலாம். பிரதமர் மோடி வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தைச் சுற்றிலும் மத்திய மற்றும் மாநில போலீசார் 500-க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதமர் பயணிக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் முழுவதும் பிரதமரின் வருகைக்காக, சுமார் 4,500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாது, அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையே, சிங்காநல்லூர் சாலை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளிக்கு இன்று (மார்ச்.18) காலை வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில், விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் எந்த பொருட்களும் கிடைக்காத நிலையில் பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated :Mar 18, 2024, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details