தமிழ்நாடு

tamil nadu

“மாமா மேடைக்கு வாங்க..” பட்டுக்கோட்டை தலைமைக் காவலரின் நெகிழ்ச்சி செயல்! - Pattukottai Constable viral video

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 8:56 PM IST

பட்டுக்கோட்டை தலைமை காவலர் சரோஜா விருது பெறும் புகைப்படம் (sredits - etv bharat tamilmadu)

தஞ்சாவூர்: சிறந்த மகளிருக்கான விருது வழங்கும் விழா, தனியார் அமைப்பு மூலம் (Womens Point Institution of Fashion Technology) இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சசிசீலா மற்றும் பட்டுக்கோட்டை காவல் டிஎஸ்பி பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், காவல்துறை, அழகு கலை, சமூக ஆர்வலர்கள், ஈடுபட்டாளர், தொழில் முனைவோர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 50 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரோஜாவுக்கும் சிறந்த மகளிருக்கான விருது வழங்கப்பட்டது.

அப்போது, விருதினைப் பெறுவதற்காக சரோஜா மேடைக்கு வந்த நிலையில், “ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பார்கள் என்பர், ஆனால், எனது வெற்றிக்குப் பின்னால் என் கணவர் இருக்கிறார். இந்த விருதை என் கணவர் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று டிஎஸ்பியிடம் கூறி, மேடையில் இருந்தவாறு மாமா வாங்கன்னு தனது கணவரை மேடைக்கு அழைத்துள்ளார்.

இதனால், கூட்ட அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது. பின்னர், மேடைக்கு வந்த தலைமைக் காவலர் சரோஜாவின் கணவர் விருதினை பெற்றுக் கொண்டு மகிழ்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details