தமிழ்நாடு

tamil nadu

LIVE: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான்! - Naam Tamilar Katchi Candidates

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 7:05 PM IST

Updated : Mar 23, 2024, 10:07 PM IST

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான்
சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அதன் நேரலைக் காட்சிகள்.. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தி வைக்கிறார். இந்த அறிமுக பொதுக்கூட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்பட்டன. மேலும், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான், தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில்  அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே உரையாற்றுகிறார். மேலும், நாம் தமிழர் கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என சீமான் ஏற்கனவே அறிவித்து இருந்தார். முன்னதாக, சீமானின் நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகத்தைச் சேர்ந்த வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சின்னங்களில் மைக் சின்னம் தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Last Updated : Mar 23, 2024, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details