தமிழ்நாடு

tamil nadu

அம்ரீத் திட்டத்தில் ஹைடெக்காக மாறப்போகும் நெல்லை ரயில் நிலையம்; மாதிரி வீடியோ வெளியீடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 5:30 PM IST

அம்ரீத் திட்டத்தில் ஹைடெக்காக மாறப்போகும் நெல்லை ரயில் நிலையம்

திருநெல்வேலி: கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ஆயிரத்து 309 இரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. அந்த வகையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிக்கு, பிரதமர் மோடி இன்று (பிப்.26)  காணொளிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை நவீனப்படுத்த காணொளிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார். மேலும் 1500 சாலைகள், மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை உள் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை 77 ரயில் நிலையங்கள் 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட உள்ளன. திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு  270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ரயில் நிலையம் நவீனப்படுத்தப்பட இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையமும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனப் படுத்தப்பட இருக்கிறது. அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையங்கள் அதிநவீன முகப்பு தோற்றம், கண் கவரும் கலை அம்சங்களுடன் கூடிய கட்டுமானங்கள், நவீன நடைப் பாலங்கள், அதிநவீன மின்தூக்கிகள், படிக்கட்டுகள், டிஜிட்டல் விளக்கப் பலகைகள், வானிலை பாதிக்காத குடைகள், நடைப் பாலங்கள், ஒருங்கிணைந்த பயணியர் தகவல் அறிவிப்பு முறைகள் மற்றும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் விசாலமான காத்திருப்பு அறைகள் அமையவிருக்கின்றன. மேலும் ரயில் நிலைய வெளிப்புறத்தில் தூய்மையான சுற்றுப் பகுதிகள் பசுமையான அமைவிடங்களும் வாகன நிறுத்துமிடங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் புதுப் பொலிவுடன் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான மாதிரி வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details