தமிழ்நாடு

tamil nadu

கும்பகோணத்தில் நவக்கிரக சுற்றுலாவை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:17 AM IST

கும்பகோணம் ஒரு நாள் நவக்கிரக சுற்றுலா பயணம்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ரூபாய் 750 கட்டணத்தில் ஒரு நாள் நவக்கிரக சுற்றுலா சிறப்பு பேருந்து வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (பிப்.24) கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அப்பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் 52 பயணிக்கும் சால்வை அணிவித்து பேருந்து பயணத்திற்கு வரவேற்றார்.

இதுகுறித்துசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "நவக்கிரக தலங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் சிறப்பு பேருந்து, இம்மாதம் முழுவதும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், இதேபோன்று பரிச்சாத்த முறையில் அறுபடை வீடுகளுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படும். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிகழ்வில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details