தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறனாளிக்கு பைக் வழங்க லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி சிக்கியது எப்படி?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 10:16 AM IST

Bribe case in Perambalur

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ரவி என்பவர், தனக்கு இருசக்கர வாகனம் வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இருசக்கர வாகனம் வழங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரபு என்பவர், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய நோட்டுகளுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சென்ற ரவி, அலுவலக ஊழியர் பிரபு கேட்ட லஞ்சமாக கேட்டிருந்த தொகையை அவரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குள் நுழைந்து, லஞ்சம் பெற்ற அலுவலக ஊழியர் பிரபுவை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பிரபு தஞ்சாவூரில் பணிபுரிந்து கொண்டிருந்ததும், அண்மையில் பெரம்பலூருக்கு பணியிடமாற்றத்தில் வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details