தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் ஹைகிளாஸ் பைக்குகளை திருடும் இளைஞர்கள்.. சிசிடிவி காட்சி வைரல்! - bike theft video viral in salem

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 8:57 PM IST

சேலத்தில் உயர்ரக பைக்குகளை திருடும் இளைஞர்கள்

சேலம்: சேலம் மாநகர் நான்கு ரோடு அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்ரக இரு சக்கர வாகனத்தை அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் பூட்டை காலால் உடைத்து சொந்த வாகனத்தைப் போல் எடுத்து திருடிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும், சேலம் நான்கு ரோடு பகுதியில் தொடர்ந்து உயர்ரக இருசக்கர வாகனங்களைக் குறிவைத்து திருடிச் செல்லும் இளைஞர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை வாரம் தோறும் இரண்டு அல்லது மூன்று இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. அதே போல மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் திருடு போனதாகவும் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத் திருட்டைத் தடுக்க சேலம் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details