தமிழ்நாடு

tamil nadu

தடை செய்யப்பட்ட பகுதியில் டிரக்கிங்.. ட்ரோன் கேமரா உதவியுடன் 300 அடி பள்ளத்தில் சடலமாக மீட்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 9:47 PM IST

Youth died in Coonoor: குன்னூர் அருகே உள்ள தடை செய்யப்பட்ட கொலக் கொம்பை செங்குட்டுவராயன் மலைக்கு 10 இளைஞர்கள் நேற்று மாலை மலை ஏற்றத்திற்காகச் சென்றபோது, அதில் பிரவீன் குமார் என்ற இளைஞர் மாயமான நிலையில், தற்போது 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.

youths-who-went-to-forbidden-mountain-in-coonoor-one-person-died-after-falling-into-a-300-foot-ravine
மஞ்சும்மல் பாய்ஸ் மோகம்; தடை மீறி குன்னூரில் மலை ஏறிய இளைஞர்கள் - 300 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி!

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கொலக் கொம்பை செங்குட்டுவராயன் மலைக்கு, நேற்று மாலை 10 இளைஞர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மலை ஏற்றத்திற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அனைவரும் மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது, மலையில் இருந்து தேனீக்கள் கூடு கலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மலையேற்றத்தில் இருந்த இளைஞர்கள் தேனீக்களைக் கண்டு நாலாபுறமும் ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு, மலையில் இருந்து இறங்கும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இதில், திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள கோபால்பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் திடீரென மாயமாகி உள்ளார். உடனே, உடன் சென்ற நண்பர்கள் பிரவீனை கூச்சலிட்டும், தவறுதலாக எங்கேனும் விழுந்து உள்ளாரா என தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் நீண்ட நேரமாக கிடைக்காத நிலையில், உடனே கொலக் கொம்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் இரவு நேரம் என்பதாலும், வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதாலும், செங்குட்டுவராயன் மலைக்குச் செல்லும் பாதி வழியிலேயே திரும்பி உள்ளனர்.

பின்பு, இன்று (மார்ச் 16) மாயமான இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், தற்போது, செங்குட்டுவராயன் மலைப் பகுதியில் உள்ள 300 அடி பள்ளத்தில் ட்ரோன் கேமரா உதவியுடன் சடலமாக இளைஞர் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். மேலும், பள்ளத்தில் இறங்கி இளைஞரின் உடலை தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இளைஞர் மலையேற்றத்தின்போது விழுந்துள்ளாரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இப்தார் நோன்பு திறப்பின்போது வாக்கு சேகரிக்க கூடாது.. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி!

ABOUT THE AUTHOR

...view details